Wednesday 27 November 2019

''தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்'' - மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!



மக்களவையின் கேள்வி நேரத்தின் போது, பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ''தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்லாடாக்சின் எம்.1 (Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.
நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன.

தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது, உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது'' எனத் தெரிவித்தார்.

Source: kalaigar seithigal

#karthickpestcontrol
#aflatoxinM1

Tuesday 19 November 2019

எலிகள் கூட தொட்டுப்பார்க்க அச்சப்படும் மைதா! தெரிந்து கொள்வோமா?


மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவிற்கு ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும் சாலையோர கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாகும் பரோட்டா உடல் நலனிற்கு ஏற்றதல்ல.
• பிரித்தெடுக்கும் முறை: கோதுமையை பலநிலைகளில் கழுவி தண்ணீரில் ஊறவைத்த பிறகு குளிர்வித்து சலித்து அதன் பிறகு 16 அரவைகளில் அரைத்து வைத்திருப்பார்கள்.
• கோதுமையை மாவாக அரைத்து மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக்க அத்துடன் பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தை கலக்கிறார்கள்.
• இந்த ரசாயனம் தலைக்கு சாயம் பூச கலக்கப்படுகிறது. மைதாவின் அளவானது அதிகமாக உடலில் சேர்ந்தால் அது நீரிழிவு ஏற்படும். மிருதுவாக இருக்க அலக்சன் என்ற ரசாயனத்தை கலக்கிறார்கள்.
• மைதாவில் குளோரின் டை ஆக்சைடு, பொட்டாசியம் குளோரைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு ஆகியவை கலக்கப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களிலும் இந்த இந்த ரசாயனங்கள் சிறிதளவில் இருக்கக்கூடும். ஆனால் நிறம் சுவை நெகிழ்வுத்தன்மை இதுபோன்ற பயன்பாட்டிற்காகவும், வாசனை, நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன.
• மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
• பசை காய்ச்சவும் பயன்படுத்துகிறார்கள். மளிகை கடைகள், தொழிற்சாலைகள்
இரவில் பிற பொருட்களை உரசிப்பார்க்கும் எலிகள் மைதா மாவை தொடவே தொடாது.


#karthickpestcontrol
#pestcontrol

Tuesday 5 November 2019

கண்ணியம் மிக்க கரையான்கள்

Image result for pest control service
KarthickPestControl


     உலகில் நன்மை செய்துவிட்டு அதை வெளிப்படுத்தத் தெரியாமல் பலரால் வெறுக்கப்படும் ஓர் உயிரினம் உண்டென்றால் அது கரையான் என்றால் மிகையாகாது. கரையான் பற்றிய பழமொழிகள்அந்த உயிரியை வெறுக்கத்தக்கதாக மாற்றியுள்ளன. மண்புழுக்களுக்கு இருக்கும் மதிப்பு கரையான்களுக்குக் கிடைக்கவில்லை.

இது ஆனால், மாண்புக்குரிய உயிரி. கட்டுமானத் துறையை வியக்கவைக்கும் திறனைக் கொண்டது கரையான். குறிப்பாகக் கட்டுமான வடிவமைப்புத்துறை. ஏனென்றால் எந்த வெதனக் கட்டுபாடும் இல்லாமல் ஓரிடத்தின் வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க ஒரு சிறிய உயிரினத்தால் எப்படி முடியும் என்று கையைப் பிசைந்து நின்றனர் கட்டுமான வடிவமைப்புத் துறை வல்லுநர்கள். ஏனெனில், கரையான் புற்றுகளின் உட்புறம் 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எப்போதும் இருக்கும். அதாவது கரையான் மட்டுமல்ல நாமும் மகிழ்ச்சியாக இருக்க இந்த வெப்பநிலைதான் சிறந்தது; உகந்தது.

எப்படி ஒரு புற்றுக்குள் இந்த வெப்பநிலைக் கட்டுப்பாடு சாத்தியமானது? இந்த அதிசயத்தைச் செய்தது கரையான்களின் கட்டிடக் கலைத் திறன். பல வகையான சுரங்கங்களையும் வழிகளையும் திறப்புகளையும் வைத்துத் தங்களது இருப்பிடத்தை அவை உருவாக்கியுள்ளன. அவ்வப்போது வெளியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை உணர்ந்து அதை மாற்றும் வகையில் மண் கொண்டு அடைத்தோ அல்லது திறந்து விட்டோ காற்றின் வரத்தைச் சரிசெய்து வெப்பத்தை நிலைப்படுத்துகின்றன.
அதே நேர வெப்பம் அதிகம் வேண்டுமாயின் கூட்டமாகச் சேர்ந்து தங்கள் உடல் வெப்பத்தைத் தமது இறகுகளால் தேனீக்களைப் போல விசிறி அதிகப்படுத்திக் கொள்கின்றன. கரியஈருயிரகை (கார்பன் டை ஆக்சைடு) வளியை வெளியேற்றியும் இவை வெப்பத்தைச் சீர்செய்யும்.

இந்தச் சின்னஞ்சிறிய உயிரியைப் பற்றி அமெரிக்க இயற்பியல் கழகத்தின் பாய்மத் துனைமவியல் (APS - fluid dynamic) துறை தனது 67-ம் ஆண்டுக் கூட்டத்தில் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியிருப்பதை வைத்துக்கொண்டே இவை எவ்வளவு இன்றியமையாத வாழ்விகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கரையான்களில் அரசன், அரசி, இளவரசி, குட்டி இளவரசி, படைஞர்கள், ஊழியர்கள் என்று ஆறு வகையான சமூக அடுக்குமுறை உள்ளது. ஊழியக்காரர்கள் சிதைப்பது, உணவு சேர்ப்பது என்ற வேலையைச் செய்வர். படைஞர்கள் எதிரிகள் வந்தால் தாக்கும் பணியைச் செய்து கூட்டத்தைக் காப்பார்கள். அரசனும் அரசியும் இணைந்து பல குழந்தைகளை ஈன்று தருவார்கள். இப்படியாக இந்தக் 'குடிகள்' தங்கள் வாழ்வை நடத்துகின்றன.
பொதுவாகக் கரையான் புற்றுகள் நன்கு அரைத்து திணிக்கப்பட்ட மண்ணால் உருவாக்கப்பட்டவை. அந்த மண்ணில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வாறு திண்ணிய மண்ணால் ஆன சுரங்க வழிகள் வளைந்து நெளிந்து இருக்கும். இவற்றின் வழியாகக் காற்று உள்ளிருந்து வெளியேயும் உள்ளேயும் பயணித்துக்கொண்டே இருக்கும்.
அத்துடன் புற்றின் வாய்ப் பகுதிகளின் சின்னஞ்சிறு துளைகள் வேறு இருக்கும் அவை வெளிப்புறக் காற்றைக் கட்டுப்படுத்தி அதாவது அதிகமான வேகத்துடன் வரும் காற்றைக் கட்டுப்படுத்தி சிறுதுளைவழியாக பீச்சி அடிக்கும், அதனால் வெப்பமான காற்று குளிர்ச்சி அடையும். இதை எண்ணிப் பார்த்தால் ஒரு புல்லாங்குழலுக்குள் காற்று நுழைவதுபோல தோன்றும்.

Source -  Hindutamil

‘Group of cockroaches’ found inside Chinese man’s ear...!

சீனாவில் ஒரு மனிதனின் வலது காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டார், அவர் தூங்கும் போது அதில் “கூர்மையான வலி” இரு...