Friday 25 October 2019

நாட்டுக்கோழி குஞ்சுகளுக்கு கரையான்...!



கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த நமக்கு கரையான் கோழிகளுக்கு தீவனமாகப் பயன் படுகிறது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். கரையான் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சு களுக்கு தீனியாக கொடுத்தால் கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி இருமடங்கு அதிகரிக்கும்.

கரையான் உற்பத்தி
ஒரு பழைய பானை, கிழிந்த கோணி அல்லது சாக்கு, காய்ந்த சாணம், கந்தல் துணி மற்றும் இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள். இப்பொருட்களை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே மண் தரையில் வைத்து விட்டு மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்து விடும்.
தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லாக் கரையான்களையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 கோழிக்குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.

அறிவியல் நுட்பம்
செம்மண் பகுதிகளில் கரையான் அதிகம் கிடைக்கும். அதிகமாக தேவையெனில் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம்.
மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுகளின் தீவனத்திற்காக உற்பத்தி செய்தார்கள்.
இத்தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான், ஆடு, மாடுகளை போல் நார்பபொருளை உண்டு வாழும் பூச்சி இனமாகும். குடலில் உள்ள நார்ப் பொருட்களை செரிக்க நுண்ணுயிர்கள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப் பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக் காளானையும் பயன்படுத்தி தொற்றுகிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான்கள் எளிதில் தாக்க ஏதுவாக அமையும்.
'இரவு' கரையான்: பொதுவாக கரையான்கள் இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலை நேரத்தில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத் திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36 சதவீதம், கொழுப்பு 44.4 சதவீதம், மொத்த எரிசக்தி 560 கலோரி/100 கிராம். சில வகை கரையான்களில் வளர்ச்சி ஊக்கி 20 சதவீதம் உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக்குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் காலம் காலமாக பயன்பட்டு வருகிறது.
இம்முறையில் கரையான்கள் வீடுகள், வீட்டு பொருட்கள் மற்றும் மரங்களை தொற்றுவதில்லை.

வாசனை ஈர்ப்பு
பானையில் இருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து இழுக்கும். ஆகவே மற்ற இடங்களை தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிகப் பிடித்து உள்ளன.
கரையான்களை பிடித்து அழிப்பதற்கு பதில் அவற்றை கோழிகள், கோழிக்குஞ்சுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் செலவில்லாமல் கோழிக்குஞ்சுகளுக்கு தீவனம் கிடைக்கிறது. வீட்டிலுள்ள பொருட்களுக்கும், மரங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

#karthickpestcontrol

No comments:

Post a Comment

Thank you

‘Group of cockroaches’ found inside Chinese man’s ear...!

சீனாவில் ஒரு மனிதனின் வலது காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டார், அவர் தூங்கும் போது அதில் “கூர்மையான வலி” இரு...